ரஜினியின் முரட்டுகாளை ரீ மேக்கில் சுந்தர் சி. நடிப்பது தெரியும். இதில் யாரை வில்லனாக போடுவது என்பதில் குழப்பம்.
முரட்டுகாளையை ஏவிஎம் தயாரித்த போது யாரை வில்லனாகப் போடுவது என்பது பெரிய பிரச்சனையாக இருந்தது. அந்த நேரம் ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். அவரை எப்படி வில்லனாக நடிக்க கேட்பது என்று அனைவருக்கும் தயக்கம். இறுதியில் அவர் சம்மதிக்க வில்லன் கதாபாத்திரம் பிரமாதமாக பேசப்பட்டது.
புதிய முரட்டுகாளையிலும் வில்லன்தான் பிரச்சனை. முதலில் ராம்கியிடம் பேசியிருக்கிறார்கள். அவர் வில்லனாக நடிக்க மறுப்பு தெரிவித்ததால் தற்போது சுமனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.