Publish Date: Thu, 16 Oct 2008 (15:28 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)
'வாழ்த்துகள்' படத்தை தொடர்ந்து இயக்குனர் சீமான் இயக்கும் படத்தில் ஜீவா நடிக்கிறார்.
சிவா மனசுல சக்தி, தெனாவட்டு படங்களுக்குப் பிறகு 3 படங்களில் நடிக்கிறார் ஜீவா. இதில் ஒரு படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க பிருந்தாசாரதி இயக்குகிறார். இன்னொரு படத்தை சீமானின் உதவியாளர் திரைவண்ணன் இயக்க இத்தேஷ் ஜெபக் தயாரிக்கிறார்.
சீமான் ஜீவாவை வைத்து இயக்கும் படத்தை புது தயாரிப்பாளர் இயக்குவார் என்று தெரிகிறது. ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை.