கேரள வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த மணிரத்னத்துக்கு அனுமதி அளித்துள்ளது கேரள அரசு.
மணிரத்னம் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை கேரளாவின் மலையாற்றூர் பகுதியில் நடத்தி வந்தார். படப்பிடிப்புக்காக மரங்கள் வெட்டப்பட்டதாகக் கூறி படப்பிடிப்பு நடத்த கேரள வனத்துறை அதிகாரி அனுமதி மறுத்தார். இதனால் படப்பிடிப்பு தடைபட்டது.
இந்நிலையில் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த நிபந்தனையுடன் அனுமதி அளித்திருக்கிறது கேரள அரசு.
மரங்களை வெட்டக் கூடாது, தினம் பத்தாயிரம் ரூபாய் கட்டணம், 150 பேர்களுக்கு மேல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளக் கூடாது, 15 வாகனங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்பவை அந்த நிபந்தனைகளில் சில.
இந்த நிபந்தனைகளுக்கு மணிரத்னம் ஒப்புக் கொண்டதால் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுவது உறுதியாகியுள்ளது.