Publish Date: Wed, 15 Oct 2008 (15:32 IST)
Updated Date: Wed, 15 Oct 2008 (15:32 IST)
நண்பர்கள் இணைந்து உருவாக்கும் படம் 'புகைப்படம்'. ராஜேஷ் லிங்கம் படத்தை இயக்க, அவரது கல்லூரி நண்பர் மணிகண்டன் படத்தை தயாரிக்கிறார்.
படத்தில் முக்கியமான வேடத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் நடிக்கிறார். மர்மயோகி படம் குறித்து பேச பேராசிரியரை தொடர்பு கொண்டிருக்கிறார் கமல். அப்போது 'புகைப்படம்' படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். உடனே போனை இயக்குனரிடம் கொடுக்க சொன்ன கமல், படத்தின் பெயர் நன்றாக இருப்பதாக பாராட்டியிருக்கிறார்.
கல்லூரி நண்பர்கள் இணைந்து உருவாக்கும் இந்தப் படத்தின் கதையும் கல்லூரி பின்புலத்தில்தான் தயாராகிறது. நான்கு நண்பர்கள் தங்களது கல்லூரி வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பதுதான் கதையாம்.
ரொம்ப பொருத்தமான கதை.