Publish Date: Wed, 15 Oct 2008 (15:32 IST)
Updated Date: Wed, 15 Oct 2008 (15:31 IST)
ராம் கோபால் வர்மாவுக்கு போட்டியாக கெளதம் வாசுதேவ மேனன் வந்தாலும் ஆச்சரியமில்லை. வாரத்துக்கு ஒரு படம் இயக்குவதுதான் வர்மாவின் ஆசை. கெளதமும் ஆள் சளைத்தவரில்லை.
'வாரணம் ஆயிரம்' இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை தொடங்கி ஏறக்குறைய முடித்து விட்டார்.
அஜித்தை வைத்து சிவாஜி பிலிம்சுக்காக இயக்கும் படத்தின் வேலைகளை நவம்பரில் ஆரம்பிக்க உள்ளார் கெளதம். இதில் அஜித் ஜோடியாக சமீரா ரெட்டி நடிக்கிறார். இசை ஹாரிஸ் ஜெயராஜ்.
இந்தப் படம் தொடங்கும் முன்பே அடுத்து மகேஷ் பாபுவை வைத்து தெலுங்கு படம் இயக்க அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். போகிற வேகத்தைப் பார்த்தால் வர்மாவை விரைவில் பின்னுக்கு தள்ளிவிடுவார் என்றே தோன்றுகிறது.