இயக்குனர் சிம்புதேவன் அடுத்தும் காமெடி படம் இயக்குவது என்பதில் உறுதியாக இருக்கிறார். வடிவேலு, கஞ்சா கருப்பு, சந்தானம் ஆகியோரை கதாநாயகனாக்கியவர் அடுத்து விவேக் நடிக்கும் படத்தை இயக்குவதாக கூறப்பட்டது.
ஆனால் சிம்புதேவனின் புதிய படத்தில் விவேக் நடிக்கவில்லையாம். அவருக்குப் பதில் மீண்டும் வடிவேலுவே நடிக்கிறாராம்.
இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தின் தோல்விக்குப் பிறகு ஹீரோவாக நடிப்பதில்லை என்ற முடிவில் இருந்தார் வடிவேலு. சிம்புதேவனிடமும் முதலில் நோதான் கூறியிருக்கிறார். பிறகு கதையை கேட்ட பின் தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டிருக்கிறார்.
அவரது பங்காளி விவேக் 'மகனே என் மருமகனே' படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். வைகை புயல் சிம்புதேவனுக்கு எஸ் சொன்னதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.
உண்மையா பாஸ்.