Publish Date: Wed, 15 Oct 2008 (13:51 IST)
Updated Date: Wed, 15 Oct 2008 (13:51 IST)
'சேவல்' படத்தை முடித்துவிட்ட பரத் அடுத்து சுரேஷ்கிருஷ்ணா இயக்கும் 'ஆறுமுகம்' படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் பேரரசுவின் திருத்தணி படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். அடுத்த வருட இறுதிவரை பரத்தின் கால்ஷீட் டைரி ஹவுஸ்ஃபுல். ஆனாலும் அதனை அட்ஜஸ்ட் செய்து கில்லாடி படத்துக்கு கால்ஷீட் தர சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஏ.வெங்கடேஷ் இயக்க, சேலம் ஏ.சந்திரசேகரன் தொங்கிய படம் 'கில்லாடி'. பரத்துக்கு நிலா ஜோடி. நிலாவின் அம்மாவாக நடிகை ரோஜா. படம் தொடங்கிய சில நாட்களில் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக படம் பாதியில் நின்றது.
படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட அனைவரும் வேறு படங்களில் பிஸியாக 'கில்லாடி' தள்ளிப் போனது.
தற்போது தனது கடன்களிலிருந்து மீண்டு வந்துள்ளார், தயாரிப்பாளர் சந்திரசேகரன். பரத்தும் பரந்த மனதுடன் 'கில்லாடி'யில் நடித்துக் கொடுக்க சம்மதித்துள்ளார்.
அடுத்த மாதம் 'கில்லாடி' படப்பிடிப்பு தொடங்குகிறது. அதே இயக்குனர், ஆர்ட்டிஸ்டுகளுடன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது.