Publish Date: Wed, 15 Oct 2008 (13:50 IST)
Updated Date: Wed, 15 Oct 2008 (13:50 IST)
மர்மயோகியில் கமலுடன் நடிப்பது பெருமைக்குரிய விடயம் என்று கூறியுள்ளார் நடிகர் வெங்கடேஷ்.
கமலின் இந்த சரித்திரப் படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். தயாரிப்பாளர் தரப்பு இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்காததால் வெங்கடேஷ் மர்மயோகியில் நடிப்பது உறுதி செய்யப்படாமலே இருந்தது.
இந்நிலையில் அவரே படத்தில் நடிப்பது குறித்து பேட்டி அளித்தார். படத்தில் தனக்கு கெஸ்ட் ரோல் கிடையாது, படம் முழுக்க வரும் வேடம் என்று தெரிவித்தார். மேலும் கமலுடன் நடிப்பது பெருமைக்குரிய விடயம், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
நவம்பர் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.