Publish Date: Mon, 13 Oct 2008 (18:58 IST)
Updated Date: Mon, 13 Oct 2008 (18:57 IST)
போட்டியை சமாளிக்க ராஜ் தொலைக்காட்சியும் படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது. டி.பி. கஜேந்திரன் ராஜ் தொலைக்காட்சிக்காக இயக்கும் படம் மகனே என் மருமகனே.
விவேக் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக யாமினி சர்மா நடிக்கிறார். இவர் வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் அறிமுகமானவர்.
இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தை இயக்கியவர் வடிவேலு படங்களுக்கு காமெடி ட்ராக் எழுதி வந்த தம்பி ராமையா. இந்திரலோகம் மண்ணை கவ்வியதால் இருவருக்கும் நடுவில் விரிசல்.
தற்போது மகனே என் மருமகனே படத்தில் தம்பி ராமையாவுக்கு ஒரு வேடம் கொடுத்து அவருக்கு அபயம் அளித்துள்ளார் விவேக்.
தொடர்ந்து விவேக்கின் காமெடி ஜமாவில் தம்பி ராமையாவை பார்க்கலாம் என்கிறார்கள் அவருடன் இருப்பவர்கள்.