Publish Date: Mon, 13 Oct 2008 (18:55 IST)
Updated Date: Mon, 13 Oct 2008 (18:55 IST)
புதுமுகங்கள் நடித்த ஆலயம் படத்தின் பெயரை மாற்றியிருக்கிறார்கள். பாண்டி ரவி என்ற பெயரில் பல படங்களில் நடித்தவர் தனது பெயரை செம்பி என்று மாற்றி நடித்திருக்கும் முதல் படம் ஆலயம்.
படத்தை இயக்கியிருப்பவர் வடிவுடையான். இது இவருக்கு முதல் படம். காசியை பின்னணியாகக் கொண்டு படத்தை எடுத்திருக்கிறார்கள். ஸ்ரீ ஸ்ரீநிவாஸராவ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது பூக்கடை ரவி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துவரும் இவருக்கு ஆலயம் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் படத்தின் ஆடியோவை வெளியிட உள்ளனர். படம் தயாராகி பல மாதங்கள் ஆனதால் அந்த இடைவெளி தெரியாமல் இருக்க படத்தின் பெயரை சாமிடா என்று மாற்றியுள்ளனர்.
படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் இந்திரஜித் இசையமைத்துள்ளார்.