Publish Date: Mon, 13 Oct 2008 (19:05 IST)
Updated Date: Mon, 13 Oct 2008 (19:04 IST)
மணிரத்னம் இயக்கிவரும் புதிய படத்துக்கு கேரள வனத்துறை அதிகாரி தடை விதித்துள்ளார்.
மணிரத்னம் தனது படத்துக்கு கேரளாவின் எர்ணாகுளம் பகுதி மலையாற்றூர் வனப்பகுதியில் அரங்குகள் அமைத்திருந்தார். இதில் படப்பிடிப்பு நடந்து வந்தது. அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யா ராயும் இங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது.
இந்நிலையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த பகுதியை பார்வையிட்ட வனத்துறை அதிகாரி, அரங்குகள் அமைப்பதற்காக மரங்களை வெட்டியிருப்பதாக் கூறி தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுத்ததோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது புகாரும் தெரிவித்துள்ளார்.
இதனால் படப்பிடிப்பு தொடர்ந்து நடப்பதில் சிக்கல் ஏற்படடுள்ளது.