Publish Date: Mon, 13 Oct 2008 (16:42 IST)
Updated Date: Mon, 13 Oct 2008 (16:42 IST)
தீபாவளிக்கு என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பது இன்னும் முடிவாகவில்லை. அஜித்தின் ஏகன் தீபாவளிக்கு கண்டிப்பாக திரைக்கு வரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
படத்தை தயாரிக்கும் ஐங்கரன் நிறுவனம் படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவித்துள்ளது. ஆனால் படம் தீபாவளிக்கு வெளியாவது சந்தேகம் என்கின்றன பட யூனிட்டிலிருந்து வரும் தகவல்கள்.
ஏகனின் பல காட்சிகள் இன்னும் படமாக்கப்பட உள்ளன. அதனால் படம் தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் இதுவரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தகவலின்படி படம் நவம்பர் மாதம் 7ஆம் தேதி திரைக்கு வரும் என்கிறார்கள். இது உண்மையானால் அஜித் ரசிகர்களுக்கு தல தீபாவளி கிடையாது.