Publish Date: Mon, 13 Oct 2008 (16:15 IST)
Updated Date: Mon, 13 Oct 2008 (16:15 IST)
உதவி கலை இயக்குனராக இருந்து பிறகு இயக்குனர் சுந்தர் சி-யிடம் அசிஸ்டெண்டாக சேர்ந்தவர் ஸ்ரீஹரி. இவர் முதல்முறையாக இயக்கும் படம் ஒரு காதல் கதை.
எதிரெதிர் வீடுகளில் வசிக்கும் இருவர் காதலிப்பதுதான் கதை. காதலன் காதலியாக ரத்தன், மஞ்சு இருவரும் அறிமுகமாகிறார்கள்.
ரத்தனின் தந்தையாக நடிப்பவர் கோட்டா ஸ்ரீனிவாசன். இதுவரை இவரை வில்லனாகத்தான் தமிழ் சினிமாவுக்கு தெரியும். முதன்முறையாக இவரை நல்லவராக காண்பிக்கப் போகிறாராம் ஸ்ரீஹரி.
படத்துக்கு ஜாக் ஆனந்த் என்பவர் இசையமைக்கிறார். தமிழ் சினிமாவின் சமீபத்திய நோயான குத்துப் பாடல் இல்லாமல் படத்தை எடுக்கப் போகிறாராம். அதற்காகவே ஸ்ரீஹரிக்கு ஒரு ஓ போடலாம்.