அடடா என்ன அழகு படத்தில் நடித்து முடித்துவிட்ட ஜெய் ஆகாஷின் அடுத்த படம் காதலன் காதலி. இந்தப் படத்தை ஜெய் ஆகாஷே திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
படத்தில் நடிக்கும்போதே ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது ஜெய் ஆகாஷின் விருப்பமாக இருந்தது. சில நடிகர்களைப் போல ஒவ்வொரு பேட்டியிலும் படம் இயக்கப் போகிறேன் என்று பில்டப் கொடுக்காமல் காத்திருந்தவர், காலம் கனிந்ததும் களம் இறங்கிவிட்டார்.
பிரெஸ்டீஜ் பிலிம்ஸ் சார்பில் இப்ராஹிம் பாஷா, ரஃபத் மாலிக் காதலன் காதலியைத் தயாரிக்கிறார்கள். ரொமான்டிக்குடன் ஆக்ஷன் கலந்த படமாக இதனை உருவாக்கவுள்ளார் ஜெய் ஆகாஷ்.
சிறிது நாட்களுக்கு முன்புதான் ஜெய் ஆகாஷிற்குத் திருமணம் நடந்தது. படம் இயக்குவது மனைவி வந்த ராசியோ!