பாடல்களை ரீ- ஷூட் செய்வது அதிகரித்து வருகிறது.
காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற நாக்க முக்க பாடல் படம் வெளிவரும் முன்பே ஹிட்டானது. அதனால், ஏற்கெனவே எடுத்த பாடல் காட்சியை நீக்கிவிட்டு, புதிதாக பிரமாண்டமாக அந்தப் பாடலை ரீ- ஷூட் செய்தனர்.
சக்கரகட்டி படத்தின் டாக்ஸி டாக்ஸி பாடலும் அதன் பிரபலத்திற்குத் தகுந்தபடி இரண்டாவது முறை ரீ- ஷூட் செய்யப்பட்டது.
ஜீவா, பூனம் பஜ்வா நடித்திருக்கும் தெனாவட்டு படத்தின் பாடல்களையும் ரீ- ஷூட் செய்யப் போகிறார்களாம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது ரீ- ஷூட் செய்வதற்கான செலவையும் சன் பிக்சர்சே ஏற்றுள்ளதாம்.
எல்லாம் நாக்க முக்க எபெஃக்ட்!