Publish Date: Sat, 11 Oct 2008 (14:21 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
சென்னை 600 028, சரோஜா படங்களில் நடித்த சிவாவின் புதிய படம் 16. இந்தப் படத்தை சபாபதி இயக்குகிறார்.
விஐபி, புன்னகை பூவே படங்களை இயக்கிய சபாபதி, சிலகாலம் படங்கள் இயக்கவில்லை. அதற்கு வட்டியும் முதலுமாக 3 படங்களை கைவசம் வைத்துள்ளார்.
பூமிகா, ஸ்ரீகாந்த், பிருத்வி ராஜ் நடிக்கும் 'மா' படத்தை சபாபதி இயக்குகிறார். இதுதவிர 'அஆஇஈ' படமும் படப்பிடிப்பில் உள்ளது. மூன்றாவதாக, சிவா நடிக்கும் 16.
இதில், மது ஷாலினி நாயகியாக அறிமுகமாகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை. அனைத்துப் பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதுகிறார்.
பதினாறு வயதின் பிரத்யேக குணங்களை பிரதிபலிப்பதாக படம் இருக்குமாம்.