தற்போதைய நிலவரப்படி நகுல் காட்டில் அடைமழை. கெளதமே நகுலை தனது படத்தில் நடிக்க விரும்பி அழைத்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் அரை கோடி வரை காதலில் விழுந்தேன் ஹீரோவிற்குத் தரத் தயாராக இருக்கிறார்கள்.
தேவயானியின் தம்பியான நகுல் விரைவில் அவரது தயாரிப்பில் ராஜகுமாரன் இயக்கும் படத்தில் நடிப்பார் என பலமான பேச்சு. தம்பியிடம் தேவயானி கால்ஷீட் கேட்டிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
காதலில் விழுந்தேன் படத்தை குடும்பத்துடன் சென்னை கமலா திரையரங்கில் பார்த்து ரசித்த தேவயானி, படம் வெற்றிபெற ஸ்பெஷல் பூஜையும் செய்திருக்கிறார்.
அப்போ, கால்ஷீட் உறுதிதான்!