Publish Date: Sat, 11 Oct 2008 (14:22 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
தங்கர்பச்சானுக்கும், இயக்குனர் சாமிக்கும் ஒரே ராசி. படத்திற்கு கதாநாயகி கிடைக்க தலைகீழாக நிற்க வேண்டும்.
காசுக்காக நடிப்பவர்கள் விபச்சாரிகள் என்று வார்த்தைவிட்ட பிறகு தங்கர் படமென்றால், தெறிக்கிறார்கள் நடிகைகள்.
தங்கரின் புதிய படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார் என்பது தெரிந்ததே. ஜனவரியில் ஆரம்பமாகும் படத்துக்கு வழக்கம்போல் நாயகி சிக்கல்.
இறுதியில் தங்கரின் பள்ளிக்கூடத்தில் நடித்த சினேகா, பிரவுதேவா ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஒன்பது ரூபாய் நோட்டு போல ஏற்கனவே எழுதிய கதையா அல்லது புதிய கதையா என்பதை இன்னமும் ரகசியமாகவே வைத்துள்ளார் தங்கர்.