ரீ-மேக் ராஜா என்ற பெயரைத் துடைத்தெறிவதற்காக அடுத்து இயக்கும் படம் என்னுடைய சொந்தப் படமாக இருக்கும் என்று சபதம் செய்துள்ளார் இயக்குநர் ராஜா.
இவர் இவரது தம்பி ஜெயம் ரவியை வைத்து இயக்கிய ஜெயம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் ஆகிய 4 படங்களுமே தெலுங்கில் இருந்து ரீ-மேக் செய்யப்பட்டவை. இதனால் 4 படங்களும் வெற்றிபெற்றும் அவரை ஒரு பொருட்டாக யாரும் மதிப்பதில்லை.
இதனை மாற்றியமைக்க, அடுத்து நேரடிப் படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் ராஜா. ஜப் வி மெட் படத்தைத் தமிழில் ரீ-மேக் செய்ய வந்த வாய்ப்பையும் நிராகரித்துள்ளார் ராஜா.
தெலுங்கு நடிகர் பிரபாஸிடம் ராஜா கதை சொல்லியிருக்கிறார். நேரடித் தெலுங்குப் படமான அது விரைவில் தொடங்கப்படலாம் என்கின்றன ஹைதராபாத் செய்திகள்.