Publish Date: Sat, 11 Oct 2008 (14:20 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
மோதி விளையாடு படத்தை இயக்கி வரும் சரண், அடுத்து நேரடி இந்திப் படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.
தமிழில் படம் இயக்கும் பலரின் டார்கெட்டாக பாலிவுட் இருக்கிறது. செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன் இருவரும் இந்தியில் படம் இயக்க ஆவலாக உள்ளனர். செல்வராகவனுக்குச் சில வாய்ப்புகள் கூட வந்தன.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமீர்கானை இயக்கும் வாய்ப்பு முருகதாஸுக்குக் கிடைத்தது. இவரை அமீர் ஏகத்திற்கும் புகழ்வதால் சல்மான்கான், அக்ஷய் குமார் போன்ற முன்னணி நடிகர்கள் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளனர். ஐந்து முதல் எட்டு கோடி வரை முருகதாஸுக்குக் கொடுக்கவும் அவர்கள் தயார்.
அதிகப்படியான பணம், அதிகப்படியான மரியாதை, அதிகப்படியான புகழ். சரணும் இதற்கு இலக்க வைத்துக் காய் நகர்த்துகிறார்.
வெற்றிபெற வாழ்த்துவோம்!