Publish Date: Sat, 11 Oct 2008 (14:22 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
அகமகிழ்ந்து போயிருக்கிறார் கீர்த்தி சாவ்லா. அவர் நடித்த படம் நூறு நாள் ஓடினால்கூட இப்படி ஆனந்தப்படுவாரா, என்பது தெரியாது!
அந்தோனி-யார்? படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கீர்த்தி சாவ்லா கலந்து கொண்டார். விழாவில பேசிய விவேக், தமிழ் தெரிந்த நடிகைகளே ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். ஆனால் கீர்த்தி சாவ்லா தனக்குத் தெரிந்த அரைகுறை தமிழை விடாப்பிடியாக பேசி வருகிறார் என்று புகழ்ந்து தள்ள, சாவ்லா முகத்தில் பெளர்ணமி.
உளியின் ஓசை படத்தின் போது கட்டாய தமிழ் பயிற்றுவிக்கப்பட்டவர்களில் கீர்த்தி சாவ்லாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு. தமிழில் பேசினால் பாராட்டு. கொடுத்து வைத்த திரையுலகம்.