பி.வாசுவின் அசிஸ்டெண்ட் மணிமாறன் இயக்கத்தில் சரவணன் நடிக்கும் படத்திற்குக் கவசம் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தில் சரவணனையும் சேர்த்து மொத்தம் மூன்று ஹீரோக்கள். சரவணன், சந்துரு மற்றும் சாய்.
மரியா மனோகர் இசையில் பாடல் கம்போஸிங் ஏற்கெனவே துவங்கி விட்டது. இதில் சாய் ஜோடியாக மதுமிதா நடிக்கிறார். மதுமிதா என்றால் குடைக்குள் மழையில் பார்த்திபனால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது அமீர் ஜோடியாக யோகியில் நடித்துவரும் மதுமிதா அல்ல. இவர் புதியவர்.
ஏற்கெனவே ஒரு மதுமிதா இருப்பதால், பெயரின் கடைசி இரு எழுத்துக்களை எடிட் செய்து, மது ஆக்கியிருக்கிறார்கள் புது முகத்தை.
'கிக்'கான பெயர் இல்லையா!