ஒருவழியாக கந்தசாமி படத்தில் இருந்து ரிலீவ் ஆகிவிட்டார் விக்ரம். மெகா பட்ஜெட் படமான கந்தசாமியில் இனி பாடல் காட்சி மட்டுமே எடுக்கப்பட வேண்டும். இந்த பாடல் காட்சிக்காக ஸ்ரேயாவுடன் இத்தாலி செல்கிறார் இயக்குனர் சுசி. கணேசன்.
இதனைத் தொடர்ந்து சாலக்குடியில் நடைபெறும் மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பில் விக்ரம் கலந்து கொள்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் மணிரத்னம் பெயர் வைக்கவில்லை. வனம், அசோக வனம், ராவணன் போன்ற பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
வரும் 12-ம் தேதி முதல் சாலக்குடியில் நடைபெறும் படப்பிடிப்பில் விக்ரம் கலந்து கொள்கிறார்.