Publish Date: Fri, 10 Oct 2008 (16:04 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
வல்லமை தாராயோ படத்தை இயக்கிய மதுமிதா அடுத்து காமெடி படமொன்றை இயக்குகிறார். படத்தின் கதை, வசனம் எழுதுகிறவர் கிரேசி மோகன்.
மதுமிதாவின் தந்தையும் வல்லமை தாராயோ படத்தின் தயாரிப்பாளருமான சுந்தர்ராமன் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தை தொடர்ந்து மேலும் இரு படங்களை அவர் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
அதில் ஒரு படத்தை சஞ்சய்ராம் இயக்க சரத்குமார் நடிக்க உள்ளார். இது ஆக்சன் படமாக இருக்கும். இது வழக்கம் போல இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகிறது.
இந்தப் படங்களை தயாரிப்பதுடன் தனது தயாரிப்பு நிறுவனத்தை பிரைவெட் லிமிடெட்டாக மாற்ற திட்டமிட்டுள்ளார் சுந்தர்ராமன்.