Publish Date: Fri, 10 Oct 2008 (15:48 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
புரொட்யூசராக இருந்து தயாரிப்பாளரானார் ஜின்னா. இவரது தயாரிப்பில் உருவான சேவல் தீபாவளிக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து முன்று படங்களை தயாரிக்கிறார் ஜின்னா.
முதல் படம் ஜான் இயக்கத்தில் ஜீவன் நடிக்கும் சரவெடி. இதில் பிரகாஷ்ராஜ் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அடுத்தப் படம் பூபதி பாண்டியன் இயக்கும் நானும் என் சந்தியாவும்.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் சாமி இயக்கும் சதம் படத்தை தயாரிக்கிறார். இது இந்திய விளையாட்டுத் துறையை கேள்வி கேட்கும் விதத்தில் இருக்குமாம்.
சாமி என்றாலே கான்ட்ரவர்ஸிதானா.