Publish Date: Fri, 10 Oct 2008 (15:45 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
இந்த தடாவை போட்டது சென்ஸார் போர்டோ அல்லது அரசோ, கலாச்சார காவலர்களோ அல்ல. நடிகர் ஜெய் ஆகாஷின் காதல் மனைவி.
அடடா என்ன அழகு படத்தில் ஜெய் ஆகாஷ் நடிக்கும் போது அவருக்கு திருமணமாகி விட்டது.
படத்தில் நாயகி நிக்கோலுடன் நெருக்கமான காட்சிகள் இருந்ததால் இயக்குனர் புத்திசாலித்தனமாக நிக்கோலின் கேரக்டருக்கு ஜெய் ஆகாஷின் மனைவியின் பெயரை வைத்துள்ளார்.
அவர் எதிர்பார்த்தது போல் காட்சிகள் சூடாக வந்துள்ளன. முக்கியமாக முத்தக்காட்சி சிறப்பாக வந்துள்ளதாம்.
இந்த நெருக்கமான காட்சிகளை பார்த்த ஜெய்யின் மனைவி இனி இது போன்ற முத்தக் காட்சியில் நடிக்கக் கூடாது என்று அன்பு கட்டளை போட்டிருக்கிறார். காதல் மனைவி அல்லவா.. ஜெய்யும் சரி என்று தலையாட்டியிருக்கிறார்.