மென்மையான உணர்வுகளை அதைவிட மென்மையாக எடுக்கிறவர் இயக்குனர் ராதாமோகன்.
இவர் இயக்கிய அனைத்துப் படங்களுமே அதிகம் பிரபலமில்லாத ஹீரோக்கள் நடித்தவை. தீபாவளிக்கு வெளிவரயிருக்கும் படத்திலும் முன்னணி கதாநாயகன் இல்லை.
தொடர்ந்து இதுபோல்தான் படம் எடுப்பீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளித்துள்ளார் ராதாமோகன். பிரமாண்டமான ஆக்சன் படங்களை எடுக்க எனக்கும் ஆசைதான்.
முன்னணி நாயகர்கள் அதில் நடித்தாலும் அது வழக்கமான படமாக இருக்காது. யதார்த்தமான கதையாகவே அதுவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
யதார்த்தமான ஆக்சன் படம். கேட்கவே சுவாரஸியமாக இருக்கிறதே.