விழாக்கள் விஷயத்தில் அஜித் இன்னொரு மணிரத்னம். படத் தொடக்க விழா உள்பட எந்த விழாவையும் ஊக்குவிப்பதில்லை. ஏகன் படத்தின் ஆடியோ விழாவும் அவர் இல்லாமலே நடந்தது.
படத்தின் இறுதிகட்ட வேலையில் இயக்குனர் ராஜுசுந்தரம் உள்பட அனைவரும் பிஸியாக இருந்ததால் ஆஹா எஃப்.எம்.-மில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் யுவன் ஷங்கர் ராஜா மட்டும் கலந்து கொண்டார்.
யுவன் ஆடியோவை வெளியிட எஃப்.எம். நிர்வாகி ராஜீவ் நம்பியார் பெற்றுக் கொண்டார்.
படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.