Publish Date: Fri, 10 Oct 2008 (15:31 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
வெங்கட்பிரபுவும், யுவன் ஷங்கர் ராஜாவும் நகமும் சதையும் போல. படத்துக்கு கதையில்லாமல் பூஜை போட்டாலும் யுவன் இல்லாமல் பூஜை போட மாட்டார் வெங்கட்பிரபு. அண்ணனும் தம்பியும் அவ்வளவு நெருக்கம்.
இதற்கு நேர் எதிராக இருக்கிறார்கள் இருவரின் தந்தைக்குலங்களும். சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கங்கை அமரன் பேசிய சில வார்த்தைகளை இளையராஜாவின் ரசிகர்களாலேயே ஜீரணிக்க முடியவில்லை. அப்படி என்ன பேசினார் கங்கை அமரன்?
எம்.எஸ். விஸ்வநாதன் எங்கள் சொத்து. அவரது நூற்றுக்கணக்கான பாடல்களை இளையராஜா திருடியிருக்கிறார். இந்த வேலையில் அவர் கில்லாடி என்று சர்ட்டிபிகெட்டும் கொடுத்தார் கங்கை அமரன்.
அண்ணன், தம்பி இடையிலான புகைச்சல்தான் இப்படி வெளிப்பட்டிருக்கிறது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். ஆனாலும் அமரன் நா காக்காததில் ராஜாவின் ரசிகர்களுக்கு வருத்தம்தான்.