வாரணம் ஆயிரம், சென்னையில் ஒரு மழைக்காலம் படங்களுக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கெளதம் வாசுதேவ மேனன்.
சிவாஜி பிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை. ஹீரோயின் சமிரா ரெட்டி. சுராங்கனி என்ற பெயரில் பரிசீலனையில் உள்ளது.
இந்தப் படத்திற்குப் பிறகு ஆக்கர் ஸ்டுடியோ, வார்னர் பிரதர்ஸ் இணைந்து தயாரிக்கும் தெலுங்கு படத்தை கெளதம் இயக்குகிறார். மகேஷ்பாபு ஹீரோ.
இதே படத்தை தமிழிலும் ஒரே நேரத்தில் இயக்க திட்டமிட்டுள்ளார் கெளதம். தமிழில் மகேஷ் பாபுவின் வேடத்திற்கு இவரது சாய்ஸ், காதலில் விழுந்தேன் நகுல்.
தனது விருப்பத்தை கெளதம் வெளிப்படையாக அறிவித்திருப்பது பலரின் புருவங்களை ஆச்சரியத்தில் விரிய வைத்துள்ளது.