Publish Date: Thu, 09 Oct 2008 (19:11 IST)
Updated Date: Thu, 09 Oct 2008 (19:10 IST)
வட இந்திய பெயராக இருந்தால் மாற்றுவார்கள். ஏற்கனவே அதே பெயரில் நடிகை இருந்தாலும் பெயரை மாற்றுவார்கள்.
இது இரண்டும் நடிகை சுஜாவுக்கு பிரச்சனையில்லை. ஆனாலும் வாயில் லாவகமாக நுழைகிற தனது சுஜா என்ற பெயருடன் தா சேர்த்து சுஜாதா ஆகியிருக்கிறார்.
நாயகியாக வேண்டும் என்பதே சுஜாவின் ஆசை. ஆனால் கிடைப்பதோ குத்துப் பாடல். இந்த ஒற்றைப் பாடல் ராசி மாறுவதற்காக பெயரை மாற்றியுள்ளார்.
நல்லவேளை... இந்த மாற்றத்தைப் பார்க்க எழுத்தாளர் சுஜாதா உயிருடன் இல்லை. இருந்திருந்தால் கற்றதும் பெற்றதில் சுஜா(தா) இடம் பிடித்திருப்பார்.