Publish Date: Thu, 09 Oct 2008 (19:03 IST)
Updated Date: Thu, 09 Oct 2008 (19:03 IST)
மனநலம் குன்றிய குழந்தைகளுக்காக இசை நிகழ்ச்சி நடத்துகிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அக்டோபர் 11 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த பாடல்களை எஸ்.பி.பி.யும், சைலஜாவும் இந்த இசை நிகழ்ச்சியில் பாட உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் வசூலாகும் பணம் விஎக்ஸல் மனநலம் குன்றிய குழந்தைகள் பள்ளிக்கு அளிக்கப்படும்.
நல்ல நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்த சிறந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறவர்களுக்கு புண்ணியத்தில் பங்கு நிச்சயம் உண்டு.