Publish Date: Thu, 09 Oct 2008 (16:27 IST)
Updated Date: Thu, 09 Oct 2008 (16:26 IST)
தெனாவட்டு படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பூனம் பஜ்வா. படம் தாமதமானாலும், சன் பிக்சர்ஸ் படத்தை வாங்கியிருப்பதால் படத்துக்கும் பூனத்திற்கும் திகட்ட திகட்ட விளம்பரம் கிடைக்கும்.
தெனாவட்டுக்குப் பிறகு ஒப்பந்தமான சேவல் தீபாவளிக்கு வெளியாகிறது. படம் வெளியாகும் முன் வேறொரு வாய்ப்பும் பூனத்தின் கதவை தட்டியிருக்கிறது.
சச்சின், ஆணிவேர் படங்களை இயக்கிய ஜான் அடுத்து ஜீவனை வைத்து படம் இயக்குகிறார். இதில் ஜீவன் ஜோடியாக நடிக்கயிருப்பவர் பூனம் பஜ்வா.
முதல் படம் வெளியாகும் முன் மூன்றாவது படம். பூனம் என்றால் யோகம் என்று அர்த்தமோ!