Publish Date: Thu, 09 Oct 2008 (17:58 IST)
Updated Date: Thu, 09 Oct 2008 (17:58 IST)
ராமராஜனை மறக்க முடியுமா? அடுத்த சி.எம். என்ற பில்டப் வரை உயர்ந்து ஒரேடியாக தாழ்ந்தவர். அ.தி.மு.க. மேடைகளில் முழங்கிவரும் இவர் விரைவில் திரைப்படத்திலும் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார்.
ஹரியின் உதவியாளர் என்.டி.ஜி. சரவணன் கலைமகள் கூடத்திற்காக இயக்கும் படத்தில் ராமராஜன் நடிக்கிறார். இவருடன் நடிக்கும் இன்னொரு பிரபலம் வடிவேலு. படத்துக்கு மேதை என்று பெயர் வைத்துள்ளனர்.
ராமராஜனுக்கு புரொடியூசர் கிடைத்தாலும் ஹீரோயின்தான் இன்னும் அமையவில்லை. ஏதேனும் நடிகை பெரிய மனது காட்டினால் உடனே படப்பிடிப்பை தொடங்க தயாராக இருக்கிறார்கள்.
படத்தில் அம்மா பாட்டு உண்டா?