Publish Date: Tue, 07 Oct 2008 (20:01 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (20:01 IST)
தாமிரா இயக்கும் ரெட்டைச்சுழி படத்தின் போட்டோசெஷன் நடந்து முடிந்துள்ளது.
இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் முதல் முறையாக இயக்குனர் சிகரம் பாலசந்தரும், இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் இணைந்து நடிக்கிறார்கள். மலையாள நடிகர் சீனிவாசன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைக்கிறார். பழனிபாரதி, அண்ணாமலை, ராமசாமி ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். பழனிபாரதி மற்றும் அண்ணாமலை எழுதிய பாடல்களின் ரெக்கார்டிங் முடிந்துவிட்டது.
ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் இடம்பெறுவதால் ராணுவ மையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியுள்ளனர்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.