Publish Date: Tue, 07 Oct 2008 (14:24 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (14:23 IST)
அறிமுக இயக்குனர் ப்ருதிவி இயக்கத்தில் விஷால் நடிப்பதாக இருந்த படம் தள்ளிப்போகிறது. அதற்கு பதில் அய்யப்பன் என்பவரின் படத்தில் நடிக்கிறார் விஷால்.
அய்யப்பனுக்கும் இதுவே முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அய்யப்பன் இயக்குனர் பூபதி பாண்டியனிடம் உதவியாளராக இருந்தவர்.
பூபதி பாண்டியனின் இயக்கத்தில் விஷால் நடித்த மலைக்கோட்டை வெற்றிப் படமாக அமைந்தது குறிப்படத்தக்கது. அய்யப்பன் இயக்கும் படத்தை ரமேஷ் பாபு தயாரிக்கிறhர்.
விஷால் ஜோடியாக அறிமுகம் கங்கனா ரனவத் நடிப்பார் எனகின்றன தகவல்கள்.