Publish Date: Tue, 07 Oct 2008 (14:20 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (14:19 IST)
விளம்பரத்தின் பலத்தில் ஒரு படத்தை முதலிடத்துக்கு கொண்டுவர முடியுமா?
முடியும். அதனை நிரூபித்துள்ளது காதலில் விழுந்தேன். சென்ற வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த இப்படம் இந்த வாரம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது.
சென்ற வாரம் முதலிடத்தை பிடித்த சக்கரகட்டி இந்த வாரம் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது வெங்கட்பிரபுவின் சரோஜா. இதன் மொத்த சென்னை வசூல் 2.20 கோடிகள். சென்ற வாரம் வெளியான துரை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதன் முதல் வார வசூல் பதினாறு லட்சங்கள்.
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ஐந்தாவது இடத்தை ராமன் தேடிய சீதை பிடித்துள்ளது. இதன் மொத்த சென்னை வசூல் 62 லட்சங்கள்.