Publish Date: Tue, 07 Oct 2008 (14:17 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (14:15 IST)
எத்தனை நடிகர்கள் வந்தாலும் எம்.ஜி.ஆர்.-சிவாஜி, ரஜினி-கமல் என்ற வரிசையில் அடுத்து வருகிறவர்கள் விஜய்-அஜித்தான். இளைய தலைமுறையில் இவர்கள் இருவருக்கும் இடையில்தான் போட்டி.
தற்போது ஏகன் படத்தில் அஜித்தும், வில்லு படத்தில் விஜய்யும் நடித்து வருகின்றனர். இது இவர்களின் 48வது படங்கள் என்பது ஆச்சரியமான ஒற்றுமை. ஏகனை ராஜு சுந்தரமும், வில்லுவை அவரது தம்பி பிரபுதேவாவும் இயக்குகிறார்கள் என்பது இன்னொரு ஒற்றுமை.
அஜித்தின் அடுத்தப் படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கிறது. கௌதம் வாசுதேவ மேனன் படத்தை இயக்குகிறார். விஜயின் அடுத்தப் படத்தை ஏவிஎம் தயாரிக்கிறது. தரணியின் அசிஸ்டெண்ட் பாபு சிவன் படத்தை இயக்குகிறார்.
இருவரின் ஐம்பதாவது படத்தை யார் இயக்குவது என்பது இன்னும் முடிவாகவில்லை. இருவருக்கும் ஐம்பதாவது படம் கவுரவ பிரச்சனை என்பதால் போட்டி கடுமையாக இருக்கும், சந்தேகமேயில்லை.