Publish Date: Tue, 07 Oct 2008 (14:08 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (14:03 IST)
மகன்களை ஹீரோவாக்கும் சினிமா பிரபலங்கள் அவர்களை வைத்து படம் இயக்க ஆர்வம் காட்டுகிறார்கள். கஸ்தூரி ராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர் என்று இதற்கு ஏராளமான உதாரணம் காட்ட முடியும்.
லேட்டஸ்டாக ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் தனது மகன் ஜெய் சிரஞ்சீவியை ஹீரோவாக்கி சூர்யா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
மகன் சாந்தனுவை வைத்து படம் இயக்க கதை தயார் செய்து வருகிறார் பாக்யராஜ். அவரது சிஷ்யர் பாண்டியராஜன் தனது மகன் பிருதிவியை வைத்து படம் பண்ண இருக்கிறார்.
தந்தைகளின் இந்த கரிசனம்தான் பல மகன்களின் ஒரே மூலதனமாக இருக்கிறது.