Publish Date: Tue, 07 Oct 2008 (14:08 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (13:50 IST)
கிருஷ்ண லீலை படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஜீவன். ஸெல்வன் படத்தை இயக்க, பாலசந்தரின் கவிதாலயா படத்தை தயாரிக்கிறது.
இது பாலசந்தரின் மன்மதலீலை படத்தின் தழுவல் என்று வந்துள்ள தகவலை பாலசந்தர், ஸெல்வன் இருவருமே மறுத்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு பிறகு, சச்சின் படத்தை இயக்கிய ஜான் இயக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
சச்சினுக்குப் பிறகு ஈழத் தமிழர்களை பற்றிய ஆணிவேர் படத்தை எடுத்த ஜான், சிபி ராஜ் நடிக்க உறுமி படத்தை இயக்குவதாக இருந்தது. அந்தப் புராஜெக்ட் தள்ளிப் போவதால் ஜீவனை வைத்து படம் பண்ண முயன்று வருகிறார்.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.