Publish Date: Mon, 06 Oct 2008 (20:34 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:19 IST)
தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த சிம்புவின் சிலம்பாட்டம் நவம்பர் மாதத்துக்கு தள்ளிப் போகிறது.
இந்த தீபாவளிக்கு கமல், ரஜினி, விக்ரம், விஜய் நடித்த படங்கள் வெளியாகவில்லை.
கெளதம் வாசுதேவ மேனனின் வாரணம் ஆயிரம், ராஜு சுந்தரத்தின் ஏகன், செல்வாவின் குரு என் ஆளு, ஹரியின் சேவல் ஆகிய படங்களே வெளியாகின்றன. மினிமம் பட்ஜெட் படங்கள் சிலவும் இந்த ரேஸில் கலந்து கொள்ளலாம்.
தீபாவளிக்கு எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் படிக்காதவன் டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது.
அதேபோல், சிம்பு, சுனாகான் நடித்திருக்கும் எஸ். சரவணனின் சிலம்பாட்டம் படமும் தீபாவளிக்கு வெளியாகவில்லையாம். நவம்பர் மாதமே திரைக்கு வருகிறதாம் இப்படம்.