Publish Date: Mon, 06 Oct 2008 (20:20 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:19 IST)
தமிழ் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுவதும், ரீ-மேக் செய்யப்படுவதும் ஒன்றும் புதிதல்ல. சமீபகாலமாக தமிழில் படம் வெளியாகும் அன்றே தெலுங்கிலும் படம் வெளியாகும். தமிழ் படங்களுக்கு ஆந்திராவில் பெருகிவரும் வரவேற்பே இதற்கு காரணம்.
சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளது. அதேபோல் கெளதமின் படங்கள் என்றால் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமின்றி அங்குள்ள நடிகர்களுக்கும் பெரிய க்ரேஸ்.
அதனால் வாரணம் ஆயிரம் படத்தை இங்கு வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியிடுகிறார்கள். தெலுங்கில் படத்துக்கு சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன் என்று பெயர் வைத்துள்ளனர்.