Publish Date: Mon, 06 Oct 2008 (14:23 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:19 IST)
நாக்க முக்க ஹிட்டுக்கு பிறகு தமிழின் முன்னணி இசையமைப்பாளராகியிருக்கிறார் விஜய் ஆண்டனி.
இயக்குனர் விக்ரமன் தனது ஆஸ்தான இசையமைப்பாளர் எஸ.ஏ. ராஜ்குமாருக்கு பதில் விஜய் ஆண்டனியை ஒப்பந்தம் செய்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இநத மாதம் விக்ரமனின் மரியாதை படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. விஜயகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மகன் விஜயகாந்துக்கு மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடிக்கிறார்.
அப்பா விஜயகாந்துக்கு ஜோடியாக நடிப்பவர் அம்பிகா. படத்தில் முக்கியமான காட்சியில் மீனாவும் நடிக்கிறார். இசை விஜய் ஆண்டனி.
அம்மா கிரியேஷன்ஸ் சிவா படத்தை தயாரிக்கிறார்.