Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்ஜெட் படங்களுக்கு எச்ச‌ரிக்கை!

Advertiesment
பட்ஜெட் படங்களுக்கு எச்ச‌ரிக்கை!
, திங்கள், 6 அக்டோபர் 2008 (14:19 IST)
வரும் நாட்களில் சிறு முதலீட்டில் தயா‌ரித்த பல படங்கள் வெளியாக உள்ளன. தீபாவளியையொட்டி வெளியாகும் இப்படங்கள் மிகப் பெ‌ரிய நஷ்டத்தை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.

இதுபற்றி கருத்து தெ‌ரிவித்த விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ‌ஜி. சேகரன், மக்கள் தீபாவளிக்கு தங்களது பர்சேஸிங்கில்தான் கவனமாக இருப்பார்கள். திரையரங்குக்கு வரமாட்டார்கள். அதனால் சின்ன பட்ஜெட் படங்களை இப்போது வெளியிட்டால் நஷ்டமே ஏற்படும்.

தவிர தீபாவளிக்கு வெளியாகும் பெ‌ரிய படங்களுக்காக சின்ன படங்களை அவை நன்றாக ஓடினாலும் தியேட்டரை விட்டு தூக்கிவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

நியாயமான அட்வைஸ். படஜெட் பட தயா‌ரிப்பாள‌ர்கள் செவி சாய்ப்பார்களா?

Share this Story:

Follow Webdunia tamil