Publish Date: Mon, 06 Oct 2008 (14:15 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:19 IST)
படத்துக்கு படம் யாரையாவது இமிடேட் செய்வதே விவேக்கின் வேலையாகிவிட்டது.
வாடா படத்தில் எம்.ஜி.ஆர்., சுருளிராஜன் இருவரையும் இமிடேட் செய்து நடித்துள்ளார். குரு என் ஆளு படத்தில் ஸ்ரேயா போன்று உடையணிந்து தோன்றுகிறார். ஏம்.எஸ். பாஸ்கருடன் இந்தப் படத்தில் அவருக்கு டூயட் எல்லாம் இருக்கிறது.
இதையடுத்து வெளிவரும் இந்திரவிழா படத்தில் சந்திரமுகியில் வரும் ரஜினியின் வேட்டைராயன் கெட்டப்பில் தோன்றுகிறார். இதற்குமுன் நாட்டாமை உள்பட புகழ்பெற்ற அனைத்து வேடங்களையும் இமிடேட் செய்துள்ளார் விவேக்.
பார்த்து... கெட்டப் விவேக் பெயர் நிலைத்துவிடப் போகிறது.