Publish Date: Mon, 06 Oct 2008 (14:10 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:19 IST)
திறமை இருந்தும் வெற்றிகளை ருசிக்காதவர் என்றால் அது அருண் விஜய்தான். தனது தோல்வி முகத்தை மாற்றியமைக்க அவரே இயக்குனராக களம் இறங்குகிறார்.
அமெரிக்கா சென்று டைரக்சன் கோர்ஸ் படித்தவர் தனது அடுத்தப் படத்தை இயக்கப் போகிறார். படத்துக்கு மலை மலை என்று பெயர் வைத்துள்ளனர். அருணுக்கு ஜோடியாக பூஜா நடிக்கிறார்.
இந்தப் படத்தை இயக்குனர் ஏ. வெங்கடேஷ் இயக்குவதாக இருந்தது. அவர் வேறு புராஜெக்டில் பிஸியாக இருப்பதால் அருண் விஜயே படத்தை இயக்குகிறார்.
ஹாலிவுட் ஸ்டைலில் படத்தை எடுக்க வேண்டும் என்பது அருணின் விருப்பம். படத்துக்கு பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை அமைக்கிறார்.