Publish Date: Sat, 04 Oct 2008 (19:52 IST)
Updated Date: Sat, 04 Oct 2008 (19:52 IST)
ஆதிநாராயணா படத்தில் புதுமுகம் கஜனுடன் நடித்து வருகிறார். மீரா ஜாஸ்மின். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் காட்சியொன்று ஆலம்பரா கோட்டையில் எடுக்கப்பட்டது. கஜனுடன், மீரா ஆடிப்பாடும் இந்தப் பாடலை பாடலாசிரியர் சினேகன் எழுதியிருந்தார்.
டுவிங்கிள் டுவிங்கிள்
லிட்டில் ஸ்டாருடா அட
நீயும் நானும்
மிங்கிளானா சூப்பர் ஸ்டாருடா
என்ற அந்தப் பாடலுக்கு சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைத்தார். மொத்தம் நான்கு நாட்கள் மூன்று கேமராக்களை பயன்படுத்தி இந்தப் பாடலை எடுத்தனர்.