சுராஜ் இயக்கத்தில் தனுஷ், தமன்னா நடிக்கும் படம் படிக்காதவன். இந்தப் படத்தில் ரீ-மிக்ஸ் ஒன்று இடம் பெறுகிறது.
இதற்காக பத்ரகாளி படத்தில் இடம்பெற்ற கேட்டேளா இங்கே பாடலை தேர்ந்தெடுத்துள்ளனர். மணிசர்மா இதனை ரீ-மிக்ஸ் செய்துள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இதே பாடலை வசந்தம் வந்தாச்சு படத்தில் ஏற்கனவே ரீ-மிக்ஸ் செய்துள்ளனர். இது தெரியாமல் படிக்காதவனிலும் பயன்படுத்தியுள்ளனர்.
ரீ-மிக்ஸ் பாடலுக்கு அந்தளவு கிராக்கி ஏற்பட்டுள்ளது.