Publish Date: Wed, 01 Oct 2008 (16:36 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (16:30 IST)
பெண்கள் படம் இயக்குவதே அரிது. அப்படியே படம் இயக்கினாலும் வெற்றி பெறுவது அதைவிட அரிது. இயக்குனர் மதுமிதா இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பார்த்திபன், சாயாசிங் நடிப்பில் இவர் இயக்கிய வல்லமை தாராயோ படம் நூறு நாட்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இதன் வெற்றி விழாவை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளார் மதுமிதா.
திரை பிரபலங்கள் பங்கேற்க படத்தின் வெற்றி விழா வரும் ஆறாம் தேதி நடக்கிறது. படத்தொடக்க விழா நடந்த அதே தி.நகர் சர் பிட்டி தியாகராயர் அரங்கில் விழாவை நடத்துகிறார் மதுமிதா.
இந்தப் படத்தின் தொடக்க விழாவில்தான் குஷ்பு கால் மேல் கால் போட்டு கடவுள் சிலைக்கு முன் அமர்ந்திருந்தார் என பிரச்சனை கிளப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.