Publish Date: Wed, 01 Oct 2008 (16:35 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (16:18 IST)
மணிரத்னத்தின் அடுத்தப்படம் தமிழ், இந்தியில் ஒரே நேரத்தில் தயாராவது தெரிந்த விஷயம். ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்குகிறார் மணிரத்னம்.
இந்தியில் இந்தப் படத்துக்கு ராவணன் என பெயர் சூட்டியிருக்கிறார். தமிழில் படத்தின் பெயர் அசோகவனம். ராவணன் சீதையை கடத்தி அசோகவனத்தில் சிறை வைத்தான் என்பது புராணம்.
இந்தியில் ராவணனை உருவகிக்கும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார். தமிழில் அந்த வேடத்தை ஏற்க இருப்பவர் ப்ருத்விராஜ்.
அசோகவனம் என்ற பெயரை வேறொருவர் சேம்பரில் பதிவு செய்து வைத்துள்ளதால் படத்தின் பெயர் மாற வாய்ப்புள்ளது.